Description
தவம் (தமிழ் வாசிப்பின் மணம்) – வார மின்னிதழின், மணம் 1, விஜயதசமி நாளில், அப்துல் கலாம் பிறந்த நாளில் 15 அக்டோபர் 2021ல் வெள்ளியன்று வெளிவருவதில் மிக்க மகிழ்ச்சி. கல்வியும் தவமும் எந்தப் பிராயத்திலும் தொடங்கலாம் எனச் சொல்கிறார் பாரதியார். என்னைத் தூங்கவிடாமல் செய்த கனவான, எல்லா வயதினரும் படிக்க ஒரு தமிழ் வலைதளம் என்பது இன்று தவம் வார மின்னிதழாக நனவாகியுள்ளது. அனைவரும் வாசித்து கற்று மகிழும் இதழாக ‘தவம்’ இருக்க வேண்டும் என்கிற ஆவலுடன் உங்களின் படைப்புகளையும் வாசிப்பையும் ஆதரவையும் எதிர்பார்த்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. படைப்புகள் (tinyurl.com/tavam), கருத்துகள், கேள்விகளை tavam.emagazine@gmail.com தவம் மின்னிதழுக்கு அனுப்பவும்.
தவம் - மணம் 1 - அக்டோபர் 15, 2021 வார மின்னிதழின் போருளடக்கம் தலையங்கம் 1. சங்க இலக்கியம் 1.1 இலக்கியத் தொடர் – சொல்லும் பொருளும் சொற்றொடரும் 1.2 இலக்கணத் தொடர் - வாடிக்கையாக இலக்கணத்தை வேடிக்கையாகப் படிக்கலாம்; வாங்க!!” 1.3 மரபுக்கவிதை தொடர் 1.4 குறளதிகாரம் தொடர் 1.5 நகைச்சுவை - வள்ளுவரோடு ஒரு வம்பு! 2. நவீன இலக்கியம் 2.1 சிறப்புக் கட்டுரை - ஒரு பக்(கா)க சிந்தனை 2.2 கட்டுரை தொடர் – எண்ண ஓட்டம் 2.3 நூல் விமர்சனம் - சுஜாதாவின் ‘ஸ்ரீரங்கத்து தேவதைகள்’ 2.4 சிறுகதை - அதிகாலை குறும்படம் 2.5.1 கவிதை - புவியீர்ப்பு 2.5.2 கவிதை - பூமி 2.5.3 கவிதை - கொலு 2.5.4 கவிதை - கனிமர நிழல் 3. மொழிபெயர்ப்பு இலக்கியம் 3.1 சிறப்புக் கட்டுரை – மொழிபெயர்ப்பாளராய் பாரதி 3.2 மொழிபெயர்ப்புக் கவிதை – ஷெல்லியின் ‘மென் குரல்கள் மாய்ந்த பிறகும்’ 4. அறிவியல் தமிழ் 4.1 தொடர் கட்டுரை - அறிபுனையும் அறிவியலும் 4.2 தொடர் கேள்விகள் - விஞ்ஞானியை வினவுங்கள்... 5. சிறுவர் இலக்கியம் 5.1 தொடர் கதை - யாளி மறவரின் சாகசப் பயணங்கள் 5.2 சிறுகதை - நன்றி மறப்பது நன்றன்று! 5.3.1 கவிதை - குட்டிப் பாப்பா 5.3.2 கவிதை - சுட சுட வடை - இரட்டைக்கிளவி 6. தமிழர் பாரம்பரியம் 6.1 தொடர் கட்டுரை - பழங்கதை பேசலாமா? 6.2 விடுகதை - இணை 7. பன்மலர் இலக்கியம் 7.1 ஓவியம் 7.2 ஓவியத்திற்கு ஒரு கவிதை - சிவனும் நானும் 7.3 பொன் மொழி 7.4 புலனத்தில் படித்ததில் பிடித்தது – சிந்தனைக்கு 8. பாராட்டும் - கொட்டும் 9. போட்டி தகவல்கள் 10. படைப்புகளை அனுப்ப...
Reviews
There are no reviews yet.